Friday, November 09, 2007

இடைவெளி

வாய் மூடாது பேசுகிறார்
பள்ளிப் பருவ நண்பனுடன்
உணவகத்தில்

மடியில் வாய் மூடாதுள்ளது
அவர் பிள்ளை.

ஊட்டுவதற்காக அவர் வைத்துள்ள
கப் ஐஸ்க்ரீம் கரண்டிக்கும்
பிள்ளையின் வாய்க்கும்
இடைப்பட்ட சந்தில்
வார்த்தைகளாய்
வழிந்தோடுகிறது
நண்பர்களின் பிள்ளைப் பருவம்.

வெகுதூரம் பின்னோக்கி
நகர்ந்துவிட்ட அப்பாவின்
கையிலுள்ள ஐஸ்க்ரீமை நோக்கி
நகர்த்திக்கொண்டேயுள்ளது
பிள்ளை
இன்னும் உலரத் தொடங்காத
தன் பிஞ்சு வாயை!

-14.11.2007 ஆனந்த விகடன் இதழில் வெளியானது

6 commentaires:

said...

அக்கா நல்லா இருக்கு....

said...

வாவ்!
ரொம்ப சூப்பரான கவிதை.

said...

ஒரு எதார்த்தரீதியிலான கவிதை.

said...

நல்ல கவிதை. எதார்த்தமாக உள்ளது.

said...

ஓ.. நீங்கதானா அது.. நான் ஆனந்தவிகடனில் இதை படித்தேன்..

யதார்த்தம்.. உங்கள் வார்த்தைகளோடு இன்னும் அழகாகிறது

said...

//வெகுதூரம் பின்னோக்கி
நகர்ந்துவிட்ட அப்பாவின்
கையிலுள்ள ஐஸ்க்ரீமை நோக்கி
நகர்த்திக்கொண்டேயுள்ளது
பிள்ளை
இன்னும் உலரத் தொடங்காத
தன் பிஞ்சு வாயை!//
ஜூப்பரு...